தாயைப் பார்த்து மகளைக் கொள்ளு.
- தமிழ்நாடு
வலுவில் வந்தவள் கிழவி.
-( ,, )
கரையைப் பார்த்துச் சீலை எடு, தாயைப் பார்த்து மகளை எடு.
- துருக்கி
மனைவியைத் தேர்ந்தெடுக்கும்பொழுது கிழவனின் பார்வை வேண்டும்; குதிரையைத் தேர்ந்தெடுக்கையில் இளைஞனின் பார்வை வேண்டும்.
-ஆர்மீனியா
அதிக அழகுள்ளவர்களைக் காட்டிலும் குருட்டுப் பெண் தேவலை.
-பர்மா
ஒரு பெண்ணைப் பற்றித் தெரிந்து கொள்ள அவள் தாயை அறியவேண்டும்; மேலும் தெளிவாகத் தெரிந்து கொள்ள அவள் தாய்வழிப் பாட்டியைப் பற்றியும் விசாரித்து அறியவேண்டும்.
-சயாம்
காதைக் கொண்டு பெண்ணைப் பார், கண்ணைக் கொண்டு பார்க்க வேண்டாம்.
- போலந்து
கலியாணத்திற்குப் பெண் தேடி நெடுந்தூரம் செல்பவன் யாரையோ ஏமாற்றப் போகிறான். அல்லது தான் ஏமாறுவான்.
- இங்கிலாந்து
பெண் எடுத்தல் பக்கத்திலும், களவாடுதல் தூரத்திலும் இருக்க வேண்டும்.
-ஸெக்
செழிப்பான பண்ணையிலிருந்து குதிரையை வாங்கு; ஏழைப் பண்ணையிலிருந்து பெண்ணை வாங்கு.
- எஸ்டோனியா
மாதாகோயிலுக்குச் செல்லும் பாதையிலிருந்து கொண்டு உனக்கு மனைவியைத் தேர்ந்தெடுக்காதே.
-( ,, )
ஒரு மனைவியைத் தேர்ந்தெடுக்க மனிதனுக்குப் போதிய நேரம் இருக்கிறது.
- ஃபின்லந்து
ஏழை வீட்டில் பெண் எடு, செல்வர் வீட்டில் குதிரை வாங்கு.
-( ,, )
எல்லாப் பெண்களிலும் உனக்கு மிகவும் அருகிலுள்ள பெண்ணையே மணந்துகொள்.
- கிரீஸ்
குதிரைகள் வாங்கும் போதும், பெண் எடுக்கும் போதும், உன் கண்களை இறுக மூடிக்கொண்டு, கடவுளின் பொறுப்பில் விட்டுவிடவும்.
-லத்தீன்
முதலில் உணவுக்கு வழிசெய், பிறகு மனைவியைத் தேடிக்கொள்ளலாம்.
- நார்வே

மணப் பெண் தொட்டிலிலிருக்கும் பொழுது, மணமகன் குதிரையேறப் பழக வேண்டும்.
-ரஷ்யா

உபதேசியாரிடம் குதிரை வாங்காதே, விதவையிடம் பெண் கொள்ளாதே.
-( ,, )

உனக்கு நல்ல மனைவி வேண்டுமானால், அவளை ஞாயிற்றுக் கிழமையில் தேர்ந்தெடுக்காதே.

- ஸ்பெயின்

பெரிய இடத்துப் பெண்ணை விவாகம் செய்து கொண்டு, பாயில் படுத்துறங்கு.
-ஆப்பிரிகா

குட்டையான பெண்ணை மணந்து கொண்டால், துணி அதிகம் தேவையிராது.
-( ,, )

அத்தை மகளை விட்டுவிட்டு, வெளியில் பெண்ணெடுப்பவன் மூடன்.
-( ,, )

திருமணத்திற்கு முன்னால் கண்களைத் திறந்து வைத்துக்கொள், பின்னால் பாதிக் கண்ணை மூடிக்கொள்.
-( ,, )


பிறர் புகழும் குதிரையை வாங்கு, பிறர் குறை பேசும் பெண்ணை மணந்துகொள்.
- எஸ்டோனியா

கருத்துக்கள்
இதுபோன்ற மேலும் கதைகள் மற்றும் புதுப்பிப்புகளுக்கு எங்கள் தந்தி குழுவில் சேரவும்.telegram channel