தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்ந்த பல மகான்களில் குறிப்பிட்டு சொல்லக் கூடியவர் மகான் ரமண மகரிஷி என்றால் அது மிகையான ஒன்றல்ல. ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்’ என்ற சொல்லுக்கு ஏற்ப மனித குலத்திற்காக அதிலும் குறிப்பாக எளியோர், வறியோருக்காக தன் வாழ்வை அர்பணித்து, அதிலே சுகம் கண்டு இறைவனை உணர்ந்தவர் ரமண மகரிஷி. ஒருமுறை அவருடைய ஆசிரமத்திற்குள் திருடர்கள் சிலர் நுழைந்து பொருட்களை அள்ளிச் செல்ல முயன்றபோது, ரமணரின் சீடர்கள் அது குறித்து ரமணரிடம் சொல்ல, அவரோ புன்னகைத்து அதனால் என்ன? எடுத்துச் செல்லட்டுமே, ஆம்! “எது என்னுடையது அதனை அடுத்தவர் அபகரிக்கிறார்” என்று வருந்த என்று கூறினாராம். வாழ்வின் தத்துவத்தை நன்கு உணர்ந்து நாம் வாழ நினைத்தால் அப்பேற்பட்ட மகான்களைப் பற்றிய செய்திகளை அறிந்தால் தான் நாமும் சிறப்பாக வாழ முடியும். இதனைக் கருத்தில் கொண்டு மக்களுக்குப் பயன்படும் வகையில் இந்த நூலினை நாங்கள் தந்திருக்கின்றோம். வாசகர்கள் படித்துப் பயன்பெற வேண்டியது.