தமிழ்நாடும் மொழியும்

1959, ஆசிரியர் பேரா. அ. திருமலைமுத்துசாமி சென்னை, அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களில் தமிழினச் சிறப்புப் பாடமாக எடுத்துப் பயிலும் மாணவர்கள், சென்னை அரசினர் நடத்தும் பொதுப்பணித் தேர்வு எழுதும் மாணவர்கள் ஆகியவர்களுக்குப் பெரிதும் பயன்படும் முறையில் 'தமிழ்நாடும் மொழியும்' என்னும் இந்நூலை நான் எழுதி, தமிழன்னையின் பாதங்களில் சூட்டுகின்றேன். மேலும் இந்நூல் தமிழ்நாடு, தமிழ் மொழி இவற்றின் வரலாற்றை அறிய விரும்பும் பொது மக்களுக்கும் துணைபுரியும் என்பது என் எண்ணம். தமிழ் மக்கள் நலம் கருதியே இதனை வெளியிடுவதல் அவர்களது முழு ஆதரவும் எனக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு. இந்நூல் உருவாகுங்கால் என்ன ஊக்குவித்த எனது பேராசிரியர் அ. மு. ப. அவர்களுக்கும், இந்நூலிற்கு வாழ்த்துரையும், அணிந்துரையும் அன்புடன் அளித்த பேராசிரியர்கள் ஆ. அருளப்பன் அவர்களுக்கும், ந. சேது ரகுநாதன் அவர்களுக்கும் எனது நன்றியைச் செலுத்துகிறேன். இந்நூல் நல்ல முறையில் வெளியாவதற்குத் துணைபுரிந்த நண்பர்களுக்கும், இந்நூலில் வெளியிட்டுள்ள படங்களைத் தந்துதவிய திரு. கி. பழநியப்பன் அவர்களுக்கும், இந்நூலை அழகிய முறையில் அச்சிட்டுக் தந்த "லலிதா பிரிண்டர்ஸ்” உரிமையாளர்க்கும் நான் என்றும் கடப்பாடுடையேன். வாழ்க தமிழ்! அ. திருமலைமுத்துசுவாமி

Tamil EditorTamil editor will bring best of tamil literature before you.
Please join our telegram group for more such stories and updates.telegram channel