←இயல் XI என்றும் நிலைத்து நிற்க...

சேதுபதி மன்னர் வரலாறு  ஆசிரியர் எஸ். எம். கமால்i. திருக்கோயில்கள்

ii. திருமடங்கள்→

 

 

 

 

 


418974சேதுபதி மன்னர் வரலாறு — i. திருக்கோயில்கள்எஸ். எம். கமால்

 

I திருக்கோயில்கள்
சேதுபதி மன்னர்களது சீமையில் அமைந்துள்ள சைவ, வைணவ திருத்தலங்கள் மிகவும் புனிதமாக நூற்றாண்டு பலவாகப் போற்றப்பட்டு வருகின்றன. பாண்டிய நாட்டின் தேவாரப் பதிகம் பெற்ற 16 திருக்கோயில்களில் சேதுபதிச் சீமையில் இராமேஸ்வரம், திருவாடானை, காளையார் கோவில், திருப்புத்துார், திருக்கொடுங்குன்றம், திருச்சுழியல் என்ற 6 திருத்தலங்களும் வைணவ ஆச்சார்யர்களால் 108 திவ்ய ஸ்தலங்கள் எனப் போற்றப் படுபவைகளில் திருப்புல்லாணியும். திருக்கோட்டியூரும் இங்கு அமைந்துள்ளன. இவையல்லாது பக்தர்ரெல்லாம் பார் மேல் சிவபுரம் என்று ஏத்தப் பெறுகின்ற திரு உத்திரகோசமங்கையும் வைணவர்களால் குறிப்பாக மணவாள மாமுனிவரால் திருப்பணி செய்யப்பெற்ற கொத்தங்குளம் என்பன போன்ற வேறு சில கோயில்களும் சேது நாட்டின் அணிகலன்களாக திகழ்ந்துவருகின்றன.
இந்தத் திருக்கோயில்களுக்குச் சேது மன்னர்களால் அறக்கொடையாக வழங்கப்பட்ட சர்வமான்ய ஊர்களில் இருந்து ஆண்டு தோறும் சேதுபதி மன்னருக்கு வருகின்ற வருவாய்களான நஞ்சைத் தீர்வை, புஞ்சைத் தீர்வை, பழவரி, தறிக்கடமை, கத்திப் பெட்டி வரி, கீதாரி வரி, சாணார் வரி முதலியன அனைத்தும் அந்தந்தத் திருக்கோயில்களுக்குக் கிடைக்கத்தக்க வகையில் சேதுபதி மன்னர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இவைகளைக் கொண்டு கோயில் நிர்வாகிகள் கோயில்களின் அன்றாட வழிபாடுகள், கட்டளைகள், ஆண்டுத் திருவிழாக்கள் மற்றும் சிறப்புக் கட்டளைகள் ஆகியவற்றை நிறைவேற்றி வந்தனர். இராமேஸ்வரம் திருக்கோயிலில் ஆண்டு தோறும் ஆவணித் திங்களில் ஆவணி மூலத் திருவிழாவும் மாசித் திங்களில் வசந்த விழாவும் நடைபெற்று வந்தன. திருப்புல்லாணி, திருக்கோயிலில் பங்குனி மாதத்தில் வசந்த விழாவும் திருமருதூர் நயினார் கோயிலில் வைகாசித் திருவிழாவும் பழனி வேலாயுத சாமி கோயிலில் தைபூசத் திருவிழாவும் மற்றும் பிற கோயில்களில் ஆண்டு முழுவதும் வெவ்வேறு மாதங்களில் பல விழாக்களும் நடைபெற்றுவந்தன. மேலும் திருப்புல்லாணித் திருக்கோயில் பெருமாளும் தாயாரும் விழாவின் போது எழுந்தருளி பவனி வருவதற்கு ஏற்ற பெரிய தேர் ஒன்றை அந்தத் திருக்கோயிலுக்கு வழங்கி முதலாவது தேரோட்டத்தையும் திருமலை ரெகுநாத சேதுபதி மன்னர் தொடக்கி வைத்தார். இராமேஸ்வரத்தில் நடைபெற்ற மாசித் திருவிழாவிற்கென முத்து விஜய ரகுநாத சேதுபதி மன்னர் புதிய தேர் ஒன்றை அன்பளிப்பாக வழங்கி அந்தத் தேரின் ஓட்டத்திற்கு முதலில் வடத்தையும் பிடித்துக் கொடுத்தார். அதே கோயிலில் இராமநாத சுவாமியும் அம்பாளும் நாள்தோறும் அர்த்த ஜாம பூஜை முடிந்தவுடன் பள்ளியறைக்குச் சென்று உறங்குவதற்கு 1600 வராகன் எடை நிறையில் ஓர் வெள்ளி ஊஞ்சலையும் இந்த மன்னர் செய்து வழங்கினார்.
சேதுபதிகளின் வரலாற்றில் மிகச் சிறந்த இடத்தைப் பெற்றுள்ள மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்கள் இராமநாதசுவாமி வெள்ளிக் கிழமை தோறும் இரவு நேரத்தில் பவனி வருவதற்காக, முழுவதும் வெள்ளியிலான தேர் ஒன்றினையும் செய்து வழங்கினார். இதே மன்னர் காளையார் கோவில், மயிலாப்பூர் ஆகிய திருக்கோயில்களில் விழாக்காலங்களில் சுவாமி எழுந்தருள்வதற்காக அழகிய பல்லக்குகளையும் செய்து வழங்கியுள்ளார். இவைகளைப் போன்று சேதுபதி மன்னர்கள் பல திருக்கோயில்களுக்குப் பல அழகிய வாகனங்களையும் செய்து வழங்கியுள்ளனர். மற்றும் இராமேஸ்வரம், திரு உத்திர கோசமங்கை, திருப்புல்லாணி ஆகிய திருக்கோயில்களில் நாள் தோறும் சிறப்பான நைவேத்தியங்கள் செய்து சுவாமிக்குப் படைப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகளையும் செய்து வந்துள்ளனர்.

மேலும் திருப்புல்லாணித் திருக்கோயிலின் கட்டுமானம் முழுவதையும் ரெகுநாத திருமலை சேதுபதி மன்னர் செய்துள்ளார். நாட்டரசன் கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் திருக்கோயில் கொடி மண்டபத்தையும், காளையார் கோவில் காளைநாதர் சுவாமி திருக்கோயிலையும், மகா மண்டபத்தையும் ரெகுநாத கிழவன் சேதுபதி மன்னர் நிறைவேற்றி வைத்துள்ளார். இராமேஸ்வரத் திருக்கோயிலின் கட்டுமானம் முழுவதையும் கூத்தன் சேதுபதி, தளவாய் சேதுபதி, திருமலை ரெகுநாத சேதுபதி, முத்து விஜய ரகுநாத சேதுபதி ஆகிய மன்னர்கள் வழிவழியாக முதலாவது, இரண்டாவது, மூன்றாவது பிரகார அமைப்புக்களையும், கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், அணுக்க மண்டபம் ஆகியவற்றையும் அமைத்துத் தங்களது தெய்வ சிந்தனையையும் சமயப்பற்றையும் எடுத்துக் காட்டியுள்ளனர். இந்த மன்னர்கள் ஒவ்வொருவரும் திருக்கோயில்களுக்கு வழங்கிய சர்வ மானிய கிராமங்கள் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சேதுபதி மன்னர்களது அறக்கொடைகள் பட்டியல்
ஆவணப் பதிவேடுகளின்படி
I உடையான் சடைக்கன் சேதுபதி

I திருக்கோயில்கள்

 

 

 

 

 


தானம் வழங்கப்பட்ட ஊர்

தானம் வழங்கப்பட்ட அமைப்பு

தானம் வழங்கப்பட்ட நாள்

 

 


1. திருவாடனை ஆதிரெத்தினேஸ்வரர் கருப்பூர் - சகம் 1527
திருக்கோயில் (கி.பி.1605) விசு பங்குனி 15
அச்சங்குடி சகம் 1528 (கி.பி.1506) பிரபவ கார்த்திகை 13


2. இராமேஸ்வரம் திருக்கோயில் நாகனேந்தல் - சகம் 1538
(கி.பி.1615) தை 15

ரெட்டையூரணி, வில்லடி வாகை - சகம் 1538 (கி.பி.1615) தை 15

II கூத்தன் சேதுபதி
 
1. திருவாடானைத் திருக்கோயில்

கீரமங்கலம் சகம் 1546 (கி.பி.1624) சித்தாட்டி பங்குனி 19 
கீரணி சகம் 1546 (கி.பி.1624) குரோதன வைகாசி 22 
கேசனி சகம் 154.5 (கி.பி.1623) ருத்ரோதரி சித்திரை 10 
பில்லூர் சகம் 154.5 (கி.பி.1623) ருத்ரோதரி தை 

III தளவாய் சேதுபதி 
1. அரியநாயகி அம்மன் கோயில், திருவாடனை
பிடாரனேந்தல் சகம் 1553 (கி.பி.1631) - சித்திரபானு தை 10 
2. ஆண்டு கொண்ட ஈசுவரர் கோயில், திருத்தேர்வளை
கொங்கமுத்தி - சகம் 1561 (கி.பி.1639) - வெகுதான்ய வைகாசி 20
தண்டலக்குடி - சகம் 1561 (கி.பி.1639) வெகுதான்ய வைகாசி 20

 IV திருமலை சேதுபதி
1. திருஉத்திர கோச மங்கைத் திருக்கோயில்

கொல்லன்குளம் - சகம் 1573 (கி.பி.1651) நந்தன ஆடி
காடனேரி - சகம் 1573 (கி.பி.1651) நந்தன ஆடி
பன்னிக்குத்தி - சகம் 1573 (கி.பி.1651) நந்தன ஆடி
கழனியேந்தல் - சகம் 1573 (கி.பி.1651) நந்தன ஆடி
கள்ளிக்குளம் - சகம் 1573 (கி.பி.1651) நந்தன ஆடி
2. இராமேஸ்வரம் திருக்கோயில்

குமாரக் குறிச்சி - சகம் 1595 (கி.பி.1673) பிரமாதீச தை 15
கருமல் - சகம் 1595 (கி.பி.1673) பிரமாதீச தை 15
முகிழ்த்தகம் - சகம் 1570 (கி.பி.1647) சுபகிருது மாசி 10
நம்பு தாழை - சகம் 1604 (கி.பி.1682) துந்துபி ஆணி 15
3. திருவாடானைத் திருக்கோயில்

ஆதியாகுடி - சகம் 1568 (கி.பி.1646) வியசு தை
4. வழிவிட்ட ஐயனார் கோயில், கமுதி

ஆலங்குளம் - சகம் 1594 (கி.பி.1670) சாதாரண மாசி 30
அய்யனார் குளம் - சகம் 1594 (கி.பி.1670) சாதாரண மாசி 30
5. மந்திர நாத சாமி கோயில், திருப்பாலைக்குடி

ஆலங்குளம் - சகம் 1594 (கி.பி.167o) சாதாரண மாசி 30
6. வேதபுரீஸ்வரர் கோயில், பிடாரனேந்தல்

கோபாலனேந்தல் - சகம் 1568 (கி.பி.1648) வியவ ஆனி 11
காளையன் வயல் - சகம் 1568 (கி.பி.1648) வியவ ஆனி 11
7. பழம்பதி நாதர் கோயில், வெளிமுத்தி

வெளிமுத்தி 8. ஆவுடையார் கோயில்
வில்வனேரி
புதுக்குடி
9. திருமேனி நாதர் ஆலயம், திருச்சுழி

காளையார் கரிசல்குளம்
பிள்ளையார் நத்தம்
நத்தக் குளம்
பாண்டியன் குளம்
முத்தானேந்தல்
சிட்டலிக்குண்டு
பழனிக்கு ஏந்தல்
துளசிக்குளம்
திருச்சுழியல்
10. வாழவந்த அம்மன் கோயில், அருப்புக்கோட்டை

வாகைக்குளம்
11. சொக்கநாதசாமி ஆலயம்

உடையார்புரம்
மீனாட்சிபுரம்
12. சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், குன்றக்குடி

தாமரைக்குளம்
திருப்பாலைப் பட்டி
நெய்வாசல் நெடுங்குளம்
கொக்கனேந்தல்
பெரிய ஆலங்குளம்
சின்ன ஆலங்குளம் 13. கமுதை, கருமேனி அம்மன் கோயில்
கமுதை - சகம் 1600 (கி.பி.1678) சித்தார்த்தி புரட்டாசி 5
14. உலகவிடங்கேஸ்வரர்கோவில் விளையாச்சிலை வீரகண்டன் பட்டி
15. அரசுநாராயணப் பெருமாள்கோயில், மேலையூர்

பெரியவராயவயல்
சிறுவராயவயல்
காட்டுக்குறிச்சி
ஆலவயல் சகம் 1585, கி.பி.1663.
16. தாண்தோண்டீஸ்வரர் கோயில், சிவபுரிப்பட்டி

1. சாத்தனுர் சகம் 1590, கி.பி.1668
17. கூரிச்சாத்த சேவகப் பெருமாள் ஆலயம், சிங்கம் புணரி.

ஆலம் பட்டி சகம் 1590, கி.பி.1668.
18. சாஸ்தாகோயில், கண்ணங்காரங்குடி

கண்ணங்காரங்குடி சகம் 1591, கி.பி.1669
19. அழகிய மெய்யர் கோயில், திருமெய்யம்

புதுவயல்
வலையன் வயல் சகம் 1591, கி.பி.1669
20. மீனாட்சி சொக்கனாதர் ஆலையம்,

பெருங்கரை சகம் 1597 கி.பி.1679.
21. தில்லை நடராஜர் பெருமான் ஆலையம், சிதம்பரம்

ஏங்கியம் - மறவணிஏந்தல்
V கிழவன் சேதுபதி
1. கூரிசாத்த ஐய்யனார் கோயில் - இராமநாதபுரம், தேவேந்திர நல்லூர்

சகம் 1600 (கி.பி.1679) சித்தார்த்தி தை 27
2. மாரியம்மன் கோயில், இராமநாதபுரம், அல்லிக்கண்மாய் சகம் 1621

(கி.பி.1700) விக்கிரம ஐப்பசி 3. சுப்பிரமணிய சுவாமி கோயில், முகவை, வாகைக்குளம் சகம் 1613
(கி.பி.1690) பிரமாதீச தை 13
4. குருசாமி கோயில், ஆன்ையூர், புளியன்குளம் சகம் 1609

(கி.பி.1687) பிரட்வ
5. சுந்தர பாண்டியன் கோயில், புதுர் நற்கணி சகம் 1600 (கி.பி.1678)

காளயுத்தி வையாசி
6. திருமேனிநாதர் கோயில், திருச்சுழி

நாடானிகுளம்
சூச்சனேரி
வடபாலை
உடைச்சி ஏந்தல்
கறுப்புக்கட்டி ஏந்தல்
7. இராமேஸ்வரம் திருக்கோயில், ஊரணங்குடி சகம் 1605 (கி.பி.1683)

ருத்ரோகாரி தை 15
8. சுந்தரரேஸ்வர சுவாமி கோயில் பூஜை, புத்துர் சகம் 1600 (கி.பி.1678)

காளயத்தி வைகாசி
9. செளமிய நாராயணப் பெருமாள் கோயில், திருக்கோட்டியூர்

கருங்காலி வயல்
வளையன் வயல்
சகம் 1601. கி.பி.1679
V1 முத்து விஜய ரெகுநாத சேதுபதி
1. இராமேஸ்வரம் திருக்கோயில்

வெண்ணத்துர் - சகம் 1639 (கி.பி.1714) ஜய சித்திரை
செம்மநாடு - சகம் 1636 (கி.பி.1714) ஜய சித்திரை
2. திருப்புல்லாணித் திருக்கோயில்

குதக்கோட்டை - சகம் 1635 (கி.பி.1713) விஜய சித்திரை 
வண்ணான் குண்டு - சகம் 1635 (கி.பி.1713) விஜய சித்திரை
பத்திரா தரவை - சகம் 1635 (கி.பி.1713) விஜய சித்திரை
மேதலோடை - சகம் 1635 (கி.பி.1713) விஜய சித்திரை
தினைக்குளம் - சகம் 1635 (கி.பி.1713) விஜய சித்திரை
உத்தரவை - சகம் 1635 (கி.பி.1713) விஜய சித்திரை
களிமண்குண்டு சித்திரை - சகம் 1635 (கி.பி.1713) விஜய சித்திரை
பள்ளமோர்குளம் - சகம் 1635 (கி.பி.1713) விஜய சித்திரை
இலந்தைக் குளம் - சகம் 1635 (கி.பி.1713) விஜய சித்திரை
3. கோதண்ட ராமசுவாமி திருக்கோயில் இராமநாதபுரம்

காரேந்தல் - சகம் 1651 (கி.பி.1729) செளமிய தை
காக்கான் குடி - சகம் 1637 (கி.பி.1714) ஜய தை
பட்டாப்புல்லாணி - சகம் 1637 (கி.பி.1714) ஜய தை
4. சொக்கநாதர் சுவாமி கோயில், இராமநாதபுரம்

சின்ன கையகம் - சகம் 1646 (கி.பி.1774) குரோதன வைகாசி
5. சூரிய தேவர் கோயில், கூடலூர்

உசிலங்குளம் - சகம் 1634 (கி.பி.1712) நந்தன. தை 7
6. படிக்காசு வைத்தசாமி கோயில், கண்ணங்குடி

விசும்பூர்
தாதன் வயல்
7. அம்பலவாணர்சுவாமி கோயில், முடுக்கன் குளம்

சிறுகுளம்
மணலை ஏந்தல்
கீழப் புதுப்பட்டி
மேலப் புதுப்பட்டி
8. அகத்திஸ்வரர்கோயில் - தாஞ்ளுர், மேலவயல் சகம் 1640-கி.பி.1718 VII பவானி சங்கர சேதுபதி
1. திருமேனி நாதர் கோயில், திருச்சுழியல்

பனையூர்
கண்டிபட்டி
கீழகண்ட மங்கலம்
காரேந்தல்
2. நாகநாதசுவாமி கோயில்

நயினார் கோயில், அண்டக்குளம் கி.பி.1726
VIII. குமார முத்து விஜயரகுநாத சேதுபதி
1. இராமேஸ்வரம் திருக்கோயில்

கொவ்வூர் - சகம் 1655 (கி.பி.1733) பிரமாதீச கார்த்திகை
2. திரு உத்திரகோசமங்கைத் திருக்கோயில்

திரானியேந்தல் - சகம் 1654 (கி.பி.1732) பரிதாபி மாசி 30
3. திருவாடானைத் திருக்கோயில்

வெளிமுத்துர் - சகம் 1657 (கி.பி.1735)ராட்சச தை
4. குமார சுவாமி கோயில்

பழஞ்சேரி - சகம் 1652 (கி.பி.1750) சாதாரண ஆவணி 8
பாண்டியன் வயல் - சகம் 1652 (கி.பி.1750) சாதாரண ஆவணி 8
5. சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயம், பெருவயல்

பெருவயல் - சகம் 1657 (கி.பி.1735) சித்தார்த்தி தை 3
கலையனூர் - சகம் 1657 (கி.பி.1735) சித்தார்த்தி தை 3
6. தண்டாயுதபாணி கோயில், பழனி

கொல்லனுர் - சகம் 1656 (கி.பி.1754) ஆனந்த கார்த்திகை 7. சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
வெங்கலக் குறிச்சி - சகம் 1656 (கி.பி.1734) ஆனந்த கார்த்திகை
கருங்காலக்குறிச்சி - சகம் 1656 (கி.பி.1734) ஆனந்த கார்த்திகை
8. திருமேனிநாத சுவாமி கோயில், திருச்சுழியல்

குண்டுகுளம்
புலிக்குறிச்சி
கல்மடம்
9. பூலாங்கால் ஐயனார் பூஜை நைவேத்தியம்

பூலாங்கால்
10. கயிலாசநாத சுவாமி கோயில் வடகரை - சகம் 1623 (கி.பி.1701) விளம்பி பங்குனி
IX சிவகுமாரமுத்து விஜய ரகுநாத சேதுபதி
1. திரு உத்திரகோச மங்கை திருக்கோயில் பாளையாறு ஏந்தல் - சகம் 1664 

(கி.பி.1742) துந்துடி வைகாசி
2. நயினார் கோயில்

புதுக்குளம்
வாகைக்குளம்
Xசெல்ல முத்து ரகுநாத சேதுபதி
1. இராமேஸ்வரம் திருக்கோயில் மாலங்குடி - சகம் 1682 (கி.பி.1760) 

விக்கிரம தை 28
2. கலியாண சுந்தரேஸ்வரர் கோயில் - வீரசோழன்

சுந்தரத்தான் - சகம் 1672 (கி.பி.1750) பிரஜோர்பதி ஆடி 5
மேலப்புலியாடக்கோட்டை - சகம் 1672 (கி.பி.1750)
பிரஜோர்பதி ஆடி 5 
பெரிய உடையனாபுரம் - சகம் 1672 (கி.பி.1750) பிரஜோர்பதி
ஆடி 5
சின்ன உடையனாபுரம் - சகம் 1672 (கி.பி.1750) பிரஜோர்பதி
ஆடி - 5
செங்கோட்டை, கோரக்குளம் - சகம் 1672 (கி.பி.1750)
பிரஜோர்பதி ஆடி 5
3. செல்லமுத்து ரெகுநாத கோயில்

கயிலாச நாதசுவாமி, வீரசோழன்
வீரசோழன் - சகம் 1675 (கி.பி.1751) பிரஜோர்பதி ஆடி 5
XI முத்து ராமலிங்க சேதுபதி
1. இராமேஸ்வரம் திருக்கோயில்

பள்ளன்குளம்
நிலமழகிய மங்கலம் - சகம் 1684 (கி.பி.1764) தாரண ஆடி
2. திருப்புல்லாணி திருக்கோயில்

உப்பாணைக்குடி பில்வ தை
நெல்லிப்பத்தி - சகம் 1690 (கி.பி.1768)
வித்தானுர் - சகம் 1705 (கி.பி.1785) கோப கிருது ஆடி
காராம்பல் - சகம் 1705 (கி.பி.1785) கோப கிருது ஆடி
பரந்தான - சகம் 1705 (கி.பி.1784) குரோதி ஆடி
3. நயினார் கோயில்

நாகலிங்கபுரம்
சின்ன ஆணைக்குளம்
4. முத்து ராமலிங்கசுவாமி கோயில், இராமநாதபுரம்

சொக்கானை - சகம் 1703 (கி.பி.1781) பிலவ தை
மத்தியல் - சகம் 1703 (கி.பி.1781) பிலவ தை 5. சாமிநாதசாமி கோயில், இராமநாதபுரம்
ஆதியான் ஏந்தல் - சகம் 1688 (கி.பி.1766) வியவ
6. திலகேசுரர் ஆலயம், தேவிபட்டிணம்

கடம்பவன சமுத்திரம் - சகம்
7. சுந்தரேசுவரர் கோயில், கமுதி

சூரன்குடி - சகம் 1686 (கி.பி.1764) தாரண ஆவணி 26 :கொடிக்குளம் - சகம் 1686 (கி.பி.1764) தாரண ஆவணி 26
8. வரகுண பரமேஸ்வரன் ஆலயம், சாலைக்கிராமம்

சின்ன உடையான்
ஆச்சியேந்தல்
9. மழவநாத சுவாமி ஆலயம், அனுமந்தக் குடி

வடக்கு செய்யான் ஏந்தல்
10. சிவநாதபாதமுடையார் கோயில், முத்துநாடு

ஆனையடி -
கேசணி -
11. நரசிம்ம பெருமாள் கோயில், கப்பலூர்

நயினாவயல் - சகம் 1695 (கி.பி.1783) கோபகிருது ஆவணி 10
12. திருமேனி நாதர் ஆலயம், திருச்சுழியல்

அக்கான் குத்தி
கள்ளத்தி குளம்
கலியான சுந்தரபுரம்
தொண்டமான் குளம்
துரிந்தாது குளம்
13. மீனாட்சி ஆலயம் - மதுரை

மொங்கனக்குறிச்சி - சகம் 1707 (கி.பி.1785) விசுவாவசு
சித்திரை 10 
திணைக்குளம்
தொட்டியர்குளம்
கூவர் குளம்
வெளியாடு குளம்
சிறு வேப்பன் குளம்
தொண்டமான் ஏந்தல்
அனுப்பனேந்தல்
குறிஞ்சா குளம்
மேல ஒடைக் குளம்
கீழ ஓடைக்குளம்
கீழ கள்ளிக்குளம்
பிளகளைக் குண்டு
பளைகனேந்தல்
வானியங்குடிகிராமம் 12.7.1806
14. அங்காளேஸ்வரி அம்மன், ஆத்தங்கரை

நாகாச்சி - சகம் 1703 (கி.பி.1781) பவ கார்த்தினை
15. நாக நாதசாமி ஆலயம், நயினார்கோயில்

ஆனையூர் - சகம் 1704 (கி.பி.1782) சுபகிருது ஆவணி 13
16. அய்யனார் கோயில்

காட்டுப் பரமக்குடி - சகம் 1707 (கி.பி.1785) விசுவாசு ஆனி 15
17. மகேசுவர சுவாமி கோயில், அக்கிரமேசி

காமன்கோட்டை - சகம் 1696 (கி.பி.1774) ஜெய. மாசி 17 XII இராணிமங்களேஸ்வரி நாச்சியார்
பூவில் இருந்த திருக்கண்ணுடைய ஐயனார் கோயில் பூலாங்குடி செப்பேடுகளின் படி திருக்கோயில்களுக்கு
I உடையான் சேதுபதி
1. இராமேஸ்வரம் திருக்கோயில்

மும்முடிச்சாத்தான்
பாண்டியர் - சகம் 1529 (கி.பி 1607) பிரபவ கார்த்திகை 12
தியாகவன் சேரி
வெங்கட்ட குறிச்சி
கோந்தை
கருங்குளம்
கள்ளிக்குளம்
வேலங்குளம்
கருவேலங்குளம் - சகம் 1530 (கி.பி.1608) பிலவங்க ஆடி 10
பொட்டக்குளம்
விடந்தை
கண்ணன் பொதுவான்
மூத்தான்சிறுகுளம்
II கூத்தன் சேதுபதி
1. இராமேஸ்வரம் திருக்கோயில்

மருதங்க நல்லூர் - சகம் 1553 (கி.பி.1631) பிரஜோற்பதி தை 25 :சேதுகால் III திருமலை ரெகுநாத சேதுபதி
1. திருப்பெருந்துறை திருக்கோயில் - சகம் 1575 (கி.பி.1653) ஜெய ஆனி 17

பெருங்காடு - சகம் 1586 (கி.பி.1664) கீலக தை
2. இராமேஸ்வரம் திருக்கோயில்

கட்டிசேரி
கங்கனி
தேர்போகி - சகம் 1582 (கி.பி.1660) சார்வரி மாசி
நாஞ்சிவயல்
நாணகுடி
3. அட்டாலைச் சொக்கநாதர் ஆலயம், பெருங்கரை

கொத்தங்குளம் - சகம் 1592 (கி.பி.1670) சாதாரண மாசி
1. திருப்பெருந்துறை ஆவுடையப்பர் கோயில்

சிறுகானுர்
பூதகுடி
உள்கிடை ஏந்தல் - சகம் 1599 (கி.பி.1677) நள
மார்கழி
சிவகாமி ஏந்தல்
குன்னக்குடி ஏந்தல்
5. இராஜ மாரியம்மன் கோயில், இராமநாதபுரம்

அல்லிக்குளம் - சகம் 1581 (கி.பி.1659) விகாரி, ஐப்பசி
6. திரு உத்திரகோசமங்கை ஆலயம்

திருஉத்திரகோசமங்கை - சகம் 1600 (கி.பி.1678) காளயுக்தி வைகாசி IV கிழவன் சேதுபதி
1. எழுவாபுரிஸ்வரர் ஆலயம்

புதுக்கோட்டை
இடையன் வயல் - சகம் 1606 (கி.பி.1684) சித்தார்த்தி வைகாசி
கள்ளிக்குடி
2. இராமேஸ்வரம் இராமநாதர் சாமி ஆலயம்

இராமநாதமடை - சகம் 1609 (கி.பி.1687) பிரபவ
நல்லுக்குறிச்சி - சகம் 1613 (கி.பி.1691) பிரஜோர்பதி
3. திருப்புல்லாணித் தெய்வச்சிலைப் பெருமாள்

இராமானுஜனேரி
காரைப்பற்று
மோர்ப்பனை
முருகக்கடி பற்று
மனையேந்தல் கோவிந்தனேந்தல்
சோனைக் குட்டம்
காவேரி ஏந்தல்
காரையடி ஏந்தல்
வெள்ளாபற்று
குதக்கோட்டை - சகம் 1610 (கி.பி.1688) விபவ
உத்தரவை
மேதலோடை
காலநத்தம்
தினைக்குளம்
தம்பிராட்டி ஏந்தல்
இருல்லா வெண்குளம் 
நல்லாங்குடி
கடம்பங்குடி
ஆதங்கொத்தங்குடி
மாவிலங்கை
கட்ட குளம்
இலங்கை வழியேந்தல்
V கிழவன் சேதுபதி மனைவி காதலி நாச்சியார்
1. இராமேஸ்வரம் திருக்கோயில்

மேலச்சீத்தை - சகம் 1615 (கி.பி.1693) பிலவங்க தை
VI முத்து விஜய ரகுநாத சேதுபதி
1. இராமேஸ்வரம் திருக்கோயில்

சேமனுர்
விளத்துார்
விரியானேந்தல்
சின்னத்தொண்டி - சகம் 1636 (கி.பி.1714) ஜய சித்திரை
நரிக்குடி
சோழியக்குடி
சிறுத்தவயல்
கொடிப்பங்கு
VII குமாரமுத்து ரகுநாத சேதுபதி
1. பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்,இராமநாதபுரம்

கள்ளிக்கோட்டை - சகம் 1652 (கி.பி.1731) சாதாரண தை
2. இராமேஸ்வரம் திருக்கோயில்

குளத்தூர் - சகம் 1655 (கி.பி.1733) பிரமாதீச கார்த்திகை 10 3. பழநி வேலாயுத சாமி கோயில், பழநி
கொல்லனுர் - சகம் 1656 (கி.பி.1734) ஆனந்த கார்த்திகை
கங்கை கொண்டான்
4. திரு உத்திரகோசமங்கை ஆலயம்

தேரிருவேலி - சகம் 1664 (கி.பி.1742) துந்துபி வைகாசி
செப்பேட்டின் படி திருக்கோயில்களுக்கு
I திருமலை சேதுபதி
1. இராமேஸ்வரம் திருக்கோயில்

முகிழ்த்தகம் - சகம் 157o (கி.பி.1647) சர்வசித்து மாசி
பனிவயல்
சூரனேம்பல்
கீழச்சூரனேம்பல்
மாவூரணி - சகம் 1579 (கி.பி.1657) விளம்பி
திருப்பந்தி
மல்லன் ஊரணி
பெரியனேந்தல்
சென்னிலக்குடி கிராமம் - சகம் 1589 (கி.பி.1668) பிலவங்க
ஆனந்துர் - சகம் 1589 (கி.பி.1667) பிலவங்க வைகாசி
பாப்பாகுடியேந்தல்
புளியங்குடி, கருமல் - சகம் 1595 (கி.பி.1673) பிரமாதீச தை
குமாரக்குறிச்சி
2. திருப்பெருந்துறைத் திருக்கோயில்

தச்சமல்லி - சகம் 1595 (கி.பி.1673) பிரமாதி வைகாசி
புல்லுகுடி - சகம் 1600 (கி.பி.1678) பிங்கல தை 5 II முத்து விஜய ரகுநாத சேதுபதி
1. கோதண்ட ராம சுவாமி கோயில் இராமநாதபுரம்

சாக்கான்குடி - சகம் 1637 (கி.பி.1715) ஜெயபட்டப்புல்லான்
2. திருவாரூர் தியாக ராஜ சுவாமி திருக்கோயில்

அன்னவாசல் - சகம் 164.5 (கி.பி.1724) குரோதன
III குமாரமுத்து விஜய ரகுநாத சேதுபதி
1. சுப்பிரமணியசுவாமி கோயில் - குளவயல்

பழையன் கால் - சகம் 1652 (கி.பி.1729). சாதாரண ஆணி 8 IV
IV சிவகுமார முத்து விஜய ரகுநாத சேதுபதி
1. திரு உத்திரகோசமங்கை மங்கள நாத சுவாமி கோயில்

பாலையாறு ஏந்தல் - சகம் (கி.பி.1742) துந்துபி வைகாசி
V முத்துராமலிங்க சேதுபதி
1. முத்துராமலிங்க சுவாமி ஆலயம், இராமநாதபுரம்

சொக்கானை - சகம் 1703 (கி.பி.1781) பிலவ தை
மத்திவயல்
2. மழவநாதசுவாமி கோயில், அனுமந்தக்குடி

வடக்குச் செய்யானேந்தல் - சகம் 1705 (கி.பி.1783) சுபகிருது
மார்கழி 27
VI முத்து விஜய ரெகுநாத சேதுபதி தம்பி முத்து ரெகுநாத சேதுபதி
1. திருப்புல்லாணித் திருக்கோயில்

ஆதன் கொத்தங்குடி - சகம் 1667 (கி.பி.1729) செளமிய தை
ரெகுநாதபுரம்
வண்ணான்குண்டு - சகம் 1651 (கி.பி.1730) செளமிய தை
தென்னம்பிள்ளை வலசை
கீரிவலசை
குத்துக்கல்வலசை சேது மன்னர்கள் அறக்கொடையாக வழங்கிய  நிலக்கொடைகளின் விவரம்
கல்வெட்டுக்களின்படி
I. திருமலை ரெகுநாத சேதுபதி

திருக்கோயில்கள்
1. சொக்கநாதர் கோயில், கீழக்கரை - மாயாகுளம் சகம் கி.பி.1645.
2. உலகவிடங்கேஸ்வரர் கோயில் விரையாச்சிலை - வீரகண்டன்பட்டி கி.பி.1662.
3. லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில், மேலையூர்.

பெரியவராய வயல்
சிறுவராய வயல்
காட்டுக்குறிச்சி - சகம் 1585 (கி.பி.1662) கோபகிறிது.
ஆலவயல்
உட்கடை
பெரியவயல்
4. தான் தோன்றி ஈசுவரர் கோயில், சிவபுரிப்பட்டி

சாத்தனூர் சகம் 1590 (கி.பி.1668) கீலக வருஷம் ஆவணி
5. சேவுகப் பெருமாள் ஐயனார் ஆலயம், சிங்கம்புணரி.

ஆலம்பட்டி சகம் (1590) (கி.பி.1664) செளமிய
6. சாஸ்தா கோயில், கண்ணங்காரக்குடி

கண்ணங்காரக்குடி சகம் 1591 (கி.பி.1669) ராஷ்சத மாசி 5.
7. தில்லை நடராஜர் ஆலயம், மறவணி ஏந்தல்
8. லெட்சுமி நாராயணன் ஆலயம், திருமெய்யம்

புதுவயல் சகம் 1591 கி.பி.1669 செளமிய தை 1 II ரெகுநாத கிழவன் சேதுபதி
1. செளமிய நாராயணப் பெருமாள் கோயில், திருக்கோட்டியூர்

கருங்காலி வயல் சகம் 1601 (கி.பி.1679) சித்தார்த்தி கார்த்திகை 5
வளையன் வயல் சகம் 1601 (கி.பி.1679) சித்தார்த்தி கார்த்திகை 5
II முத்து விஜய ரெகுநாத சேதுபதி
1. அகத்தீஸ்வரர் கோயில், தாஞ்சூர்

காஞ்சிராவடி சகம் 1640 (கி.பி.1718) பிரஜோர்பதி ஐப்பசி 7
IV பவானி சங்கர சேதுபதி
1. நயினார் கோயில், நயினார் கோயில் - அண்டக்குளம். 
V குமார முத்து விஜய ரகுநாத சேதுபதி
1. சிவ சுப்பிரமணிய சுவாமி ஆலயம், பெருவயல்.

பெருவயல் கலையனுர் சகம் 1658 (கி.பி.1736) ராட்ஷச
2. இராமநாத சுவாமி கோயில், இராமேஸ்வரம்.

முத்து நாட்டின் நஞ்சை, புஞ்சை நிலங்கள்
சகம் 1659 (கி.பி.1737) ஐப்பசி 31.பிங்கள,
VI முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி
1. நயினார் கோயில், நயினார் கோயில்

காரடர்ந்தகுடி சகம் - குரோதி.
VII ராணி மங்களேஸ்வரி நாச்சியார்
1. பூவிருந்த ஐய்யனார் கோவில், பூலாங்குடி

பூலாங்குடி கி.பி.1806 சூலை 24 அட்சய ஆடி 1
2. சீனிவாசப் பெருமாள் ஆலையம் - அகத்தியர் கூட்டம்
நெடியமாணிக்கம் - கி.பி.1806 

 

 


 

Please join our telegram group for more such stories and updates.telegram channel