←வீடு

குடும்பப் பழமொழிகள்  ஆசிரியர் தியாகி ப. ராமசாமிஅண்டை வீட்டுக்காரர்

இல்வாழ்க்கை→

 

 

 

 

 


439225குடும்பப் பழமொழிகள் — அண்டை வீட்டுக்காரர்தியாகி ப. ராமசாமி

 

 


அண்டை வீட்டுக்காரர்

 அண்டை வீட்டுக்காரரை நேசி, ஆனால் குறுக்குச் சுவரை இடித்து விடாதே.  -இந்தியா  
உன் தலைக்குச் சேராத தொப்பியை அடுத்த வீட்டுக்காரர் தலையில் கட்டாதே.  -( ,, )  அண்டை அயலார் அனுமதித்தால்தான், நீ அமைதியோடு வாழலாம்.  -( ,, ) 
அம்மா சொல்வது போல் உண்மை இராது, அயலார் சொல்வதே உண்மை.  -( ,, ) 
பக்கத்து வீட்டுக்காரன் உன் பந்துவைவிட நெருங்கினவன்.  -அல்பேனியா  துருக்கியரைப் பற்றியும், போப்பாண்டவரைப் பற்றியும்
பேச்சு வருகிறது; ஆனால் எனக்குத் தொந்தரவு கொடுப்பவன் என் அண்டை வீட்டுக்காரன்.  - இங்கிலாந்து  
உன் அண்டை வீட்டுக்காரன் நல்லவனா யிருந்தால், உன் வீடு கூடுதலாக நூறு பவுன் பெறும்.  -ஸெக்  
அண்டை அயலான் தயவில்லாமல் எவனும் வாழ முடியாது.  - டென்மார்க்  
மூன்று பேர்களின் பக்கத்தில் குடியிருக்க வேண்டாம்: பெரிய நதிகள், பெரிய பிரபுக்கள், பெரிய சாலைகள்.

 -( ,, )  
நரிகளை விட அதிகமாக நம் அக்கம் பக்கத்திலுள்ளவர்களே நம்மைக் கவனிப்பார்கள்.

 - கிரீஸ்  
நல்லவர்களின் நடுவில் வசித்தல் வெகு தூரத்தில் புகழப்படுவதைவிட மேலாகும்.  - நார்வே  அண்டை வீட்டை விலைக்கு வாங்குவதைப் பார்க்கினும்,
அண்டை வீட்டானையே விலைக்கு வாங்கு.  -ரஷ்யா  
மனிதன் நண்பர்களில்லாமல் இருக்க முடியும், ஆனால் அக்கம் பக்கத்து வீட்டார்கள் இல்லாமல் முடியாது.  -( ,, )  அண்டை வீட்டுக்காரருக்கு நஷ்டமில்லாமல் நாம் அடையும் இலாபமே இலாபம்.  - ஜெர்மனி  பக்கத்து வீட்டுக்காரரே நாம் முகம் பார்த்துக் கொள்ளும் கண்ணாடி.  - இங்கிலாந்து  
நண்பர்கள் இல்லாமல் நாம் வாழலாம், அண்டை அயலார் இல்லாமல் வாழ முடியாது.  -( ,, ) 
 

 

 


 

Please join our telegram group for more such stories and updates.telegram channel