←பழமை

குடும்பப் பழமொழிகள்  ஆசிரியர் தியாகி ப. ராமசாமிஒற்றுமை

விருந்து→

 

 

 

 

 


439239குடும்பப் பழமொழிகள் — ஒற்றுமைதியாகி ப. ராமசாமி

 

 


ஒற்றுமை

 
ஒத்த மனமுடையவர்கள் சேர்ந்தால், கடலையும் வற்ற வைக்கலாம்.  - இந்தியா  
நானும் என் சகோதரனும் எங்கள் அத்தானுக்குப் பகையானாலும், அந்நியன் வந்தால், நானும் அத்தானும் அவனுக்குப் பகையா யிருப்போம்.  - அரேபியா  
வாதியும் எதிரியும் ஒரு படகிலே சென்றால், சாட்சிகள் நீந்தித்தான் செல்ல வேண்டும்.   -கீ. நா.  அறுந்த கயிற்றை முடிக்கலாம், ஆனால் முடிச்சு இருக்கும்.  -பாரசீகம்  
ஒரு நகரத்திற்கு எதிராக மூன்று பேர்கள் ஒன்று சேர்ந்தால், அதை அழித்து விடுவார்கள்.  -அரேபியா  
மூன்று பிரிகளைக் கொண்ட சரட்டை விரைவில் அறுக்க முடியாது.  -ப. ஏற்பாடு  
தனியே நிற்கும் ஆடு ஓநாயிடம் சிக்கக்கூடும்.

 - இங்கிலாந்து  
ஒன்று சேர்ந்தால், நாம் வாழ்வோம்; பிரிந்தால், வீழ்ந்து விடுவோம்.  -( , , )  
பலமில்லாதவையும் ஒன்று சேர்ந்தால், பலமுண்டாகிவிடும்.  -( , , ) 
ஒருவருக்காக எல்லோரும், எல்லோருக்குமாக ஒவ்வொருவரும்.  -டூமாஸ்  
ஒற்றுமைப்பட்டால் வலிமை அதிகம்.  - லத்தீன்  
அடக்கமாக அடங்கிக் கிடப்பவர்களுக்கு ஒற்றுமையே சிறந்த வலிமை.  -( , , )  
கயிறு கட்டாத கதிர்க்கட்டு வெறும் வைக்கோல்தான்.

 -ரஷ்யா  
எவன் என்னோடு இருக்கவில்லையோ அவன் எனக்கு எதிரானவன்.   -பு. ஏற்பாடு  
கட்டாகவுள்ள கழிகளை ஒடிக்க முடியாது.  -ஆப்பிரிகா   

 

 

 

Please join our telegram group for more such stories and updates.telegram channel