←ஆரோக்கியம்

குடும்பப் பழமொழிகள்  ஆசிரியர் தியாகி ப. ராமசாமிநோய்

வைத்தியம்→

 

 

 

 

 


439245குடும்பப் பழமொழிகள் — நோய்தியாகி ப. ராமசாமி

 

 


நோய்


கோழிக்கு ஊசிப்புண் போதும்.  - இந்தியா  எப்பொழுதும் நோயுள்ளவனுக்குப் பெயர் ஆரோக்கியசாமி.  -( , ,) 
முதல் சாமத்தில் எல்லோரும் விழித்திருப்பர்,
இரண்டாவதில் போகி விழித்திருப்பான். மூன்றாவதில் திருடன் விழித்திருப்பான், நான் காவதில் நோயாளி

விழித்திருப்பான்.  -( , ,)  
நோய் வந்து விட்டால் எந்த வைத்தியரையாவது அழை.

 -சீனா  வெளிச்சம் வருகிற சாளரத்தை அடைத்தல் வைத்தியர்
வருவதற்குக் கதவைத் திறத்தலாகும்.  -( , ,)  
வயிற்றுப் பக்கம் நோயில்லையானால் நோயாளி இறக்க மாட்டான்.  -( , ,) 
கால் வலியை மறக்கலாம், தலைவலியை மறக்க முடியாது.  -ஆர்மீனியா  
நோய் குணமாகாது என்று தெரிந்தால் இருக்கிற மருந்தை ஒருவன் வீணாக்கமாட்டான்.  -ஜெர்மனி  
நோயே ஒரு வைத்தியன்.  -( , ,) 
நோயைப் போற்றி வைப்பவனிடம் அது உறவு கொண்டாடும்.  -( , ,) 
நோயாளியிடம் பணம் இருப்பதற்குத் தக்கபடி பிணி நீடிக்கும்.  -( , ,) 
உடலுக்கு நோய் வந்தால், மனத்திற்கு வந்து விடும்.

 -போஸ்னியா  
நோயின் தந்தை எவனாயிருந்தாலும், தாய் உணவுக் கோளாறுதான்.  - இங்கிலாந்து  
'ஆஸ்துமா' வந்தவர் நெடுநாள் வாழ்வர்.  -அயர்லந்து  
முகத்தில் ஒரு பரு வந்து விட்டால் உடலுக்குள் சயித்தான் புகுந்த மாதிரி.  -( , ,)  ஒவ்வொரு பிணியும் ஒரு வைத்தியன்.  -( , ,) 
நீடித்த நோய்களுக்குப் பொறுமைதான் மருந்து.  -( , ,)  
வரட்சியான இருமல் வந்து விட்டால், எல்லா நோய்களும் தீர்ந்து விடும்.

 - வேல்ஸ்  
[மரணம்]
மூக்கின்மேல் பரு வந்தால் அது ஆளை மறைத்துவிட்டுத் தானே முன்னால் தெரியும்.  -பல்கேரியா  ஆரோக்கியத்தின் அருமையை நோயில்தான் அறியலாம்.
 -ஹங்கேரி  
ஈக்கும் இருமலுண்டு.  - இதாலி  நோய் வந்தவுடனேயே அதைக் கவனிக்க வேண்டும்.
 -லத்தீன்  
நோயின் கசப்பிலிருந்துதான் மனிதன் ஆரோக்கியத்தின் இனிமையை அறிகிறான்.  -கடலோனியா  நோயாளியின் நண்பன் அவனுடைய கட்டில் தான்
 - ஆப்பிரிகா  
நோயை மறைத்தல் அபாயம்.  -லத்தீன்  நோயைக் கண்டுபிடித்தலே ஆரோக்கியத்திற்கு ஆரம்பம்
 -ஸ்பெயின்  
வரும்போதுநோய் குதிரைமேல் வரும், நீங்கும்போது நடந்து செல்லும்.  - இங்கிலாந்து  காலந்தோறும் நோயும் மாறுகின்றது.  -( , ,) 
தடுமனுக்கு உணவு, காய்ச்சலுக்கு பட்டினி.  -( , ,)  
புண்ணும் கட்டியும் எங்கு வேண்டுமானாலும் உண்டாகும்.  -ஜப்பான்  
பிணி ஒவ்வொரு மனிதனுக்கும் யஜமானன்.  -டென்மார்க்  
பிணியே வராதவன் முதல் வகுப்பிலேயே இறந்து போவான்  - இங்கிலாந்து  
நோயாளியின் அறை பிரார்த்தனைக் கூடம்.  -( , ,)  
நோயாளி எதுவும் பேசலாம்.  - இதாலி  நோயுற்ற காலங்களில் ஆன்மா தன் வலிமையைச் சேர்த்து கொள்கின்றது.  -லத்தீன்  
நோய் நாம் யார் என்பதைக் காட்டுகின்றது.  -( , ,)  
நோயாளிக்கு தேனும் கசக்கும்.  -ரஷ்யா 
 

 

 


 

Please join our telegram group for more such stories and updates.telegram channel