←ஒற்றுமை

குடும்பப் பழமொழிகள்  ஆசிரியர் தியாகி ப. ராமசாமிவிருந்து

இளமை→

 

 

 

 

 


439240குடும்பப் பழமொழிகள் — விருந்துதியாகி ப. ராமசாமி

 

 


விருந்து

 
வீட்டிலிருக்கும் விருந்தாளி கடவுளுக்கு நிகரானவர்.

 -ஸெக்  
வருகிற விருந்தினரை வரவேற்று, போகிறவரை விரைவில் வழியனுப்பு.  -போப்  
விருந்தும் மருந்தும் மூன்று நாள்.  - தமிழ்நாடு  
மருந்தே யாயினும் விருந்தோடு உண்.  -( , , )  
முதல் நாள் விருந்தாளி, மறுநாள் தொந்தரவு.  - இந்தியா  
அம்மான் வீடானாலும், ஏழு நாட்களுக்குத்தான் வசதியாயிருக்கும்.  -( , , ) 
விருந்தென்றால், வீடு நிறையக் கூட்டம்; உபவாச

மென்றால், உலகமே திரும்பிப் பார்ப்பதில்லை.  -சீனா  
விருந்தினன் நாத்திகனாயினும், அவனைக் கௌரவிக்க வேண்டும்.  -அரேபியா  
அழைத்து வந்தவனை விட, அழையாமல் வந்தவன் மேல்.  - கால்மிக்  
விருந்துச் சாப்பாடு கடனாக அளிக்கப்படுவது.

 - ஆப்கானிஸ்தானம்  
[நாமும் திரும்ப விருந்தளிக்க வேண்டும்.] 
நேரம் கெட்ட நேரத்தில் வீட்டுக்கு வரும் விருந்தாளி துருக்கியனை விட மோசமானவன்.

 -பல்கேரியா  
வீட்டு அம்மாளின் விருந்தாளி பாக்கியசாலி, வீட்டுக்காரனின் விருந்தாளி பாக்கியமற்றவன்  -ஃபின்லந்து  
விருந்தாளியின் பார்வை கூர்மையானது.  -ஐஸ்லந்து  
முன் தகவலோடு வரவும், அன்புடன் வழியனுப்பும்படி

- போய்விடவும்.- இதுதான் நல்ல விருந்தாளிக்கு அடையாளம்.  -லிதுவேனியா  
விருந்தாளி அதிகாலையில் எழுந்திருந்தால், இரவில் அவன் நம்முடன் தங்க விரும்புகிறான் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.  -ரஷ்யா  விருந்தினரின் முதுகுப்புறம்தான் அழகு.  - ஸ்பெயின்  
விருந்தினர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதை மறந்து விடக்கூடாது.  -சுவீடன்  
புது விருந்தை வீட்டினுள் அழையாமலிருத்தல் கேவலம், வந்த விருந்தை வெளியேற்றுவது அதைவிட மோசம்.

 -லத்தீன்  
அதிக உபசாரம் அபசாரத்திற்கு அறிகுறி.  -சீனா  
கடன் வாங்கி விருந்துகள் நடத்தி ஆண்டியாக வேண்டாம்.  -அபாகிரைஃபா  
மற்றொருவர் மாளிகையில் விருந்து நன்றாகத்தான் இருக்கும்.  -ஹாலந்து  
விருந்து முடிந்த பிறகு மனிதன் தலையைச் சொறிகிறான்.  -ஃபிரான்ஸ்  
விருந்து நடத்திக் கொள்ளக் காலம் இருக்கிறது.  -( , , )  
மூடர்கள் விருந்து நடத்துகிறார்கள், அறிவாளிகள் அதை அநுபவிக்கிறார்கள்.  -இதாலி  
இன்று விருந்து, நாளை உபவாசம்.  - லத்தீன்  
பெரிய விருந்தும் சிறிது நேரம்தான்.  -யூதர்  விருந்தினால் வைத்தியர்களுக்கு வேட்டை.  - இங்கிலாந்து  
விருந்து நடத்தினால் நண்பர்கள் கிடைத்து விட மாட்டார்கள்.  -( , , ) 
 

 

 


 

Please join our telegram group for more such stories and updates.telegram channel