14. பாஞ்சாலி ஏன் சிரித்தாள்?
பாரதப் போரில் வீடுமர் அர்ச்சுனன் அம்பால் அடிபட்டு வீழ்ந்தார்
விடுமர் பெருஞானி பகவான் பரசுராமனின் மாணாக்கர் அவர் விரும்பும் போது தான் அவர் உயிர் பிரியும். அத்தகைய வரத்தை அவர் தந்தை, சந்தனு அளித்தார்.
அவர் அம்புபட்டு வீழ்ந்த காலம் தட்சிணாயணம் உத்தராயண காலத்தில் உயிர் துறந்தால்தான் மோட்சம் கிட்டும் ஆதலால் உத்தராயணம் வரும்வரை, அர்ச்சுனன் அமைத்துக் கொடுத்த அம்புப் படுக்கையில் படுத்திருந்தார்
அப்போது தருமன் அவரை வணங்கி, அரசநீதி அறிவுறுத்தும் படி வேண்டினான் கண்ணபெருமானும் அரச நீதியைத் தருமனுக்குக் கூறும்படி வற்புறுத்தினான்
அம்புப் படுக்கையில் படுத்துள்ள துன்பத்தையும் பொருட்படுத்தாமல், வீடுமர் அரசநீதி கூறத் தொடங்கினார்
அப்போது அருகிலிருந்த பாஞ்சாலி உரக்கச் சிரிக்கத் தொடங்கினாள்
அவள் சிரிப்பதற்குக் காரணம் என்ன என்று வீடுமர் கேட்டார்
“தாத்தா! வேறு காரணம ஏதும் இலலை தாங்கள் பெருஞானி நலலறம முழுவதும் அறிநதவர் உலகிலேயே உயர்ந்த குறிககோளுடன வாழந்தவர். அப்படியிருந்தும் துரியோதனன் சூதாடடம் என்னும வஞ்சனையால், எங்கள் நாட்டைய பறித்துக் கொண்ட போது, அரசநீதி துரியோதனனுககுக கூறவிலலை துச்சாதனன், என்னை மானபங்கப படுததிய போதாவது அறவுரை கூறித் தடுத்திருககலாம் எங்களைக் காட்டுககு அனுப்பாமல தடுத்திருக்கலாம் அப்போது வாய் திறவாமல, தீயவர் செயலுக்கு 
உடன்பட்டுருந்த நீங்கள். இப்போது அரசநீதி கூறத் தொடங்குவதை எண்ணிப் பார்த்தேன். சிரிப்பு வந்துவிட்டது” என்றாள் பாஞ்சாலி.
“குழந்தாய்! பாஞ்சாலி! நீ நினைத்ததும் சிரித்ததும் ஞாயமானவைதாம் அதற்குரிய காரணம் சொல்ல நான் கடமைப்பட்டுள்ளேன்”.
“நான் உண்ட உணவு துட்டனாகிய துரியோதனனுடையது அந்த உணவால் உண்டான இரத்தம் என் உடலில் ஓடியது. அந்த இரத்தம் அறநெறியைக் கழுவி, அநீதிச் சேற்றை என்னுள் தேக்கி விட்டது”.
“அதனால்தான், என் வாயிலிருந்து அறநெறி வெளிவரவில்லை. இப்போது, அர்ச்சுனன் அம்புகள் என் உடலைத் துளைத்து, அந்த அநீதிக் குருதி முழுவதையும் வெளியேற்றிவிட்டது”.
“இப்போது என் உடலில் ஓடுவது. இறை பக்தியாகிய குருதி அதனால்தான் அறநெறி கூற என் உணர்வு என்னைத் தூண்டுகின்றது எத்தகைய தூயவராயினும் தீயவர் உறவும் உணவும் உடையவரானால், தீமை கண்டும் சீறி யெழவிடாமல், உணர்வு மழுங்கிவிடும் என்பதற்கு என் செயல் தக்க எடுத்துக்காட்டு. அன்றைய செயலுக்காக இன்று நான் நாணுகின்றேன் என்னைக் கண்டு நீ சிரித்தமைக்காக நான் வெறுப்படையவில்லை மாறாக உவப்பு அடைகின்றேன்”
என்று கூறிவிட்டுத் தருமனுக்கு அரசநீதி கூறத் தொடங்கினார் வீடுமர் 

 

Please join our telegram group for more such stories and updates.telegram channel