18. துரோணரும் ஆடுகளும்
துரியோதனன் முதலிய நூற்றுவர்க்கும் தருமன் முதலியயோருக்கும் வில்லாசிரியர் துரோணர்.
அவருக்கு ஒரே மகன் அவன் பெயர் அசுவத்தாமன். அவன் தாய் வயிற்றில் பிறக்காமல், இறையருளால் தானே தோன்றியவன் ஆதலால் அவனுக்குத் தாய்ப்பால் கிடைக்கவில்லை.
பசுப்பால் வாங்குவதற்கும் வசதி இல்லை. தம் நண்பனான பாஞ்சால மன்னன் துருபத மன்னனிடம் சென்று, ஒரு பாற்பசு தரும்படி கேட்டார் துரோணர்.
பாஞ்சாலன் பாற்பசு தராமல் துரோணரை அவமதித்து அனுப்பினான்
துரோணர் பால் கிடைக்காமல் அவதிப்படுகின்றார் என்று கேள்விப்பட்ட ஓர் வள்ளல் இரு பாலாடுகளை வழங்கினார்.
அந்த ஆடுகளைக் கணட கள்வன் ஒருவன் அவற்றைத திருடிச் செல்லத் தருணம் பார்த்துக் கொண்டிருந்தான்
ஒர் அரக்கன் துரோணரைத் தனக்கு ஆகாரம் ஆக்கிக் கொள்ளக் காலம் கருதியிருந்தான்
ஒருநாள், கள்வன் ஆடுகளைத் திருடத் துரோணரின் ஆசிரமத்தின் அருகே பதுங்கியிருந்தான்
அந்நேரம் அரக்கனும் துரோணரைப் பிடித்து உண்பதற்காக அங்கே வந்தான்
அரக்கனும் திருடனும சந்திததுக கொண்டனர் ஆடு திருட வநததாகத திருடன் சொனனான முனிவரைப் புசிக்க வந்ததாக
அரக்கன் கூறினான் இருவரில் யார் முதலில் தம் தொழிலை முடிப்பது என்பதில் விவாதம் ஏற்பட்டது. அரக்கன், “நான் தான் முதலில் முனிவரைத் தின்பேன்” என்றான், திருடன், “நான் தான் முதலில் ஆடுகளைத் திருடுவேன்” என்றான் விவாதம் வலுத்தது.
துரோணர் நிலைமையை உணர்ந்து கொண்டார். தன் தவ வலிமையால் அரக்கனைச் சாம்பலாக்கி விட்டார் திருடனைக் கல்லாகச் சபித்தார்.
குரு நிலத்தை அடுத்த காட்டில் இன்றும் அந்தக்கல் இருப்பதாகப் பேசிக் கொள்கின்றனர்.