27. கணிகைப் பெண்ணின் பக்தி
காந்தியடிகளின் பிரார்த்தனைக் கீதம்.
“ரகுபதி ராகவ ராஜாராம்
பதீத பாவன சீதாராம்”
என்பது கணந்தோறும் ராம நாம ஜபம் செய்து வந்தமையாலேயே, அமரராகும் போது கூட, “ஹே ராம்” என்ற அமுத நாமம், அவர்தம் அருள்வாயில் ஒலித்தது
ராமநாமம், அண்ணல போன்ற மகாத்மாக்களுக்கு மட்டுமா பயன்தரும்! கடையனுக்கும் கதிமோடசம் தரும் தெய்வீக நாமம் அல்லவா அது இதறகுச் சான்றாக ஒரு வரலாற்றினைச் சூர்தாசர் கூறியுள்ளார் அந்த வரலாறு மிகமிகச் சுருங்கியது ஆனால பயனில் விஞ்சியது
ஓர் ஊரில் கணிகை ஒருத்தி இருந்தாள் அவளை விரும்பித் தேடி வரும் ஆடவர்க்கெல்லாம் இன்பம் தந்து, அதற்கு விலைபெறும் புலைத் தொழிலில் ஈடுபட்டிருந்தாள்
உடலால் மாசுபட்டாலும், அவள் உள்ளம் மாசுபடாமல் இருந்தது மாசுபடாத உள்ளம் இறைவன் ஆலயம் அல்லவா அவள் உள்ளத்தில இறைவன் குடிகொண்டிருந்தான்
அவள், ஒரு கிளி வளர்த்தாள் அதற்குத் தன் இட்ட தெய்வமாகிய “சீதாராம்” என்று பெயர் சூட்டினாள் இந்திமொழியில், கிளிக்குத் தோதா என்று பெயர் அதனால், அதனைத் தோதாராம் என்றும் அழைப்பாள்
“சீதாராம், சீதாராம்” என்று கிளியை அடிக்கடி அழைத்து வந்தமையால், அவள் நாக்கு அசையும் போதெல்லாம் சீதாராம் என்ற நாமம் தானாகவே ஒலிக்கலாயிற்று
அந்தக் கணிகைக்கு இறுதிக் காலம் அடுத்தது தான் செல்லமாக வளர்த்த கிளியைச் சீதாராம் கீதாராம் என்று அழைத்துக்கொண்டிருக்கும் போதே உயிர் பிரிந்தது
மரணத் தருவாயில் சீதாராம் என்ற இறைவன் திருநாமத்தை உச்சரித்தமையால், இறைவன் தூதர்கள் வந்து அவளைத் தெய்வ விமானத்தில் மிக்க மரியாதையுடன் ஏற்றிப் பரமபதத்துக்கு அழைத்துச் சென்றனர்
இருடிகளும் முனிவர்களும் பலகாலம் தவம் செயதும் எளிதிற் பெற இயலாத வானோர்க்கு உயர்ந்த உலகத்தைச் சீதாராம் என்ற திருநாமம் உச்சரித்தமையால் பெற்றாள் ஒரு கணிகை என்பது வியப்புத் தானே!